DBS Bank: சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட டிபிஎஸ் வங்கி 49 சதவீத நிகர லாபத்தை பதிவு செய்து உள்ளது.
DBS Bank: சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட டிபிஎஸ் வங்கி 49 சதவீத நிகர லாபத்தை பதிவு செய்து உள்ளது.

Published on: July 10, 2026 at 11:27 am
புதுடெல்லி ஜூலை 10 2026; டி.பி.எஸ் பேங்க் ஆப் இந்தியா, 2026 நிதியாண்டில் (FY26) 49% நிகர லாப உயர்வை பதிவு செய்துள்ளது. லாபம் ரூ.1,020 கோடியாக உயர்ந்தது. கடன் வழங்கல் 15% அதிகரித்ததும், செலவுகள் குறைந்ததும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டி.பி.எஸ் பேங்க் ஆப் இந்தியா, சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட டி.பி.எஸ் வங்கி நிறுவனத்தின் இந்திய பிரிவு, FY25-இல் ரூ.684 கோடி இருந்த நிகர லாபத்தை FY26-இல் ரூ.1,020 கோடியாக உயர்த்தியுள்ளது. மொத்த கடன் ரூ.62,172 கோடியாக உயர்ந்துள்ளது. BFSI மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தேவைகள் அதிகரித்ததால் advances 15% உயர்ந்துள்ளது.
மறுபுறம் செலவுகள் குறைந்தது லாபத்தை அதிகரிக்க உதவியது. வட்டி செலவுகள் 13% குறைந்து ரூ.5,431 கோடியாகவும், ப்ரொவிசன்ஸ் 30% குறைந்து ரூ.434 கோடியாகவும் இருந்தன. மொத்த வருவாய் 7% குறைந்து ரூ.10,591 கோடியாக காணப்படுகிறது.
இதையும் படிங்க; ஆர்.டி.சி.எல் 10 சதவீத பங்குகளை வாங்கிய எஸ்.பி.ஐ.. அதிரடி மூவ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com