Dollar Gains Against Rupee : அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சிறிதளவு சரிந்து 95.70 ஆக நிலைபெற்றது.
Dollar Gains Against Rupee : அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சிறிதளவு சரிந்து 95.70 ஆக நிலைபெற்றது.

Published on: May 28, 2026 at 11:50 am
Updated on: May 28, 2026 at 2:01 pm
புதுடெல்லி, மே 28, 2026: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சிறிதளவு சரிந்து 95.70 ஆக நிலைபெற்றது. வெளிநாட்டு நாணய சந்தையில் புதன்கிழமை (மே 27, 2026) ரூபாய் சிறிதளவு மதிப்பிழந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 95 ரூபாய் 70 பைசாவில் முடிவடைந்தது.
அதன்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 95.70 ரூபாய் ஆக காணப்பட்டது. புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய நாணய மாற்றங்கள் காரணமாக இது நிகழ்த்துள்ளது. இதற்கிடையில் டாலர் இன்டெக்ஸ் குறியீடு 99.13 ஆகவும் காணப்பட்டது. இது, அமெரிக்க டாலரின் வலிமையை, 6 முக்கிய நாணயங்களுடன் ஒப்பிட்டு காட்டுகிறது.
மேலும், இன்ட்ரா டே வர்த்தகத்தின் போதும், அமெரிக்க பணத்தின் மதிப்பு அதிகரித்தே காணப்பட்டது. இதற்கிடையில், புவிசார் அரசியல் அச்சங்கள் நாணய சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால், இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சிறிய நன்மை எனப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாணய சந்தை குறுகிய காலத்தில் அதிர்வுகளை சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு.. முடிவுக்கு வருகிறதா ஈரான்- அமெரிக்கா போர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com