LIC Jeevan Anand Policy: எஸ்.ஐ.சி.யின் இந்த சிறப்பு திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.45 வீதம் சேமித்து ரூ.25 லட்சம் என்ற நிலையை பிடிப்பது எப்படி?
LIC Jeevan Anand Policy: எஸ்.ஐ.சி.யின் இந்த சிறப்பு திட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.45 வீதம் சேமித்து ரூ.25 லட்சம் என்ற நிலையை பிடிப்பது எப்படி?
Published on: March 25, 2025 at 1:32 pm
எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1358 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.25 லட்சம் பெறலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதை தினசரி அடிப்படையில் பார்த்தால், நீங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.45 வீதம் சேமிக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் பாலிசி குறைந்த பிரீமியத்தில் உங்களுக்காக ஒரு பெரிய நிதியைத் திரட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில், பாலிசிதாரருக்கு ஒன்று அல்ல, பல முதிர்வு சலுகைகள் கிடைக்கும். இதில், காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ஆகும்.
ரூ.25 லட்சம் குவிப்பது எப்படி?
இந்த, எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசியில், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,358 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.25 லட்சம் பெறலாம். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நீங்கள் நீண்ட காலத்திற்கு இந்தச் சேமிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதாவது 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில், இந்தத் திட்டத்தின் முதிர்ச்சிக்குப் பிறகு, உங்களுக்கு ரூ. 25 லட்சம் கிடைக்கும்.
அதாவது, இந்த எல்ஐசி பாலிசியில் 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.16,300 முதலீடு செய்தால் முதலீட்டு தொகை ரூ.5,70,500 ஆக இருக்கும். இதற்கிடையில், அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக இருக்கும். தொடர்ந்து, திருத்தப்பட்ட போனஸ் ரூ.8.60 லட்சமாகவும், இறுதி போனஸ் ரூ.11.50 லட்சமாகவும் இருக்கும்.
அந்த வகையில், முதலீட்டாளருக்கு முதிர்வின் போது ரூ.25 லட்சம் வரை கிடைக்கும். அதேநேரத்தில் இந்தத் திட்டத்தில் கடன் பெறும் வசதியும், வரி விலக்கு வசதியும் உள்ளது.
இதையும் படிங்க : SIP vs PPF: ஆண்டுக்கு ரூ.95 ஆயிரம் முதலீடு.. 15 ஆண்டுகளில் எதில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com