IPL 2025 CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 25 2025) தொடங்கியது.
IPL 2025 CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 25 2025) தொடங்கியது.
Published on: March 25, 2025 at 1:52 pm
உலகளாவிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2025 மார்ச் 23ஆம் தேதி இந்தியாவில் தொடங்கின. வழக்கமான உற்சாகத்துடன் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 28 2025 இல் மோதுகின்றன.
இந்த கிரிக்கெட் போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 25 2025) தொடங்கியது.
அதன்படி இன்று காலை 10.15 முதல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இதற்கான டிக்கெட்டுகளை www.chennaisuperkings.com என்ற தளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
டிக்கெட் விலை என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்ச் மோதும் இந்த கிரிக்கெட் போட்டியை காண பல்வேறு விதமான டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அதன்படி, ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,000 உள்ளிட்ட விலைகளில் கிடைக்கின்றன.
மேலும் நபர் ஒன்றுக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் பிளாக்கில் கிடைப்பதை தவிர்க்கும் வகையிலும்; ஒரே இடத்தில் குவிந்து விடக்கூடாது என்பதை தடுக்கும் வகையிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை பிரிந்த சஹால்: ஜீவனாம்சம் இத்தனை கோடியா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com