Yuzvendra Chahal And Dhanashree Verma Divorce: இந்திய கிரிக்கெட்டர் யுஸ்வேந்திர சஹால் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவருக்கு கொடுக்கவுள்ள ஜீவனாம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Yuzvendra Chahal And Dhanashree Verma Divorce: இந்திய கிரிக்கெட்டர் யுஸ்வேந்திர சஹால் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவருக்கு கொடுக்கவுள்ள ஜீவனாம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: March 19, 2025 at 6:02 pm
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் தனது நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவிற்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூபாய் 2.37 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் தனஸ்ரீ சஹாலிடமிருந்து ரூ. 60 கோடி ஜீவனாம்சம் கோருவதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் தனஸ்ரீ குடும்பத்தினர் இந்த செய்திகளை நிராகரித்தனர். வர்மா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஜீவனாம்சம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஆதரமற்றது. இப்படி இந்த கூற்றுகள் குடும்ப உறுப்பினருக்கு ஏமாற்றத்தை அழிப்பதாக உள்ளன. ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம்.
தனஸ்ரீ வர்மா ஒருபோதும் சஹாலிடமிருந்து எந்த ஜீவனாம்சமும் கேட்கவில்லை ஆதாரமற்ற தகவல்களால் நாங்கள் மிகவும் கோபமடைந்துள்ளோம். இதுவரை எந்த ஜீவனாம்சம் கோரப்படவில்லை வழங்கப்படவும் இல்லை. இது போன்ற செய்திகள் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்றது. இது குடும்பத்தினரையும் தேவையற்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. இது போன்ற பொறுப்பற்ற செய்திகள் வெளியிடுவதை தவிர்க்கவும் என்று தெரிவித்தார்.
2020ல் திருமணம் செய்து கொண்ட யுஸ்வேந்திர சஹால் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் விவாகரத்து நாளை மார்ச் 20 அன்று இறுதி செய்யப்படுகிறது.
இதையும் படிங்க மாலத்தீவில் ரோஹித் சர்மா; மகளுடன் விடுமுறை கொண்டாட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com