Pawan Kalyan | ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில், “நரசிம்ஹா வராகி கணம்” என்ற சனாதன பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
Pawan Kalyan | ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில், “நரசிம்ஹா வராகி கணம்” என்ற சனாதன பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
Published on: November 3, 2024 at 12:53 pm
Pawan Kalyan | சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக நரசிம்ம வாராஹி கனம் என்ற புதிய பிரிவை கட்சியில் அமைத்துள்ளதாக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் சனிக்கிழமை (நவ.2, 2024) தெரிவித்தார்.
இது குறித்து பேசிய பவன் கல்யாண், “சனாதன தர்மம் காக்க ஜனசேனாவில் தனி பிரிவை தொடங்கி அதற்கு நரசிம்ம வாராஹி கணம் என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார்.
மேலும், தான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்றும், ஆனால் இந்து மதத்தை இழிவுபடுத்த முயற்சிப்பவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்யாண் கூறினார். “நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன், ஆனால் என் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் அல்லது அவமரியாதையாகப் பேசுபவர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார்.
ஏலூர் மாவட்டத்திற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது புதிய பிரிவு அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. திருப்பதி பாலாஜி கோவிலில் லட்டு சர்ச்சைக்கு மத்தியில், பவன் கல்யாண் தேசிய அளவிலான சனாதன் தர்ம ரக்ஷன் வாரியத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் தனது சொந்தக் கட்சிக்குள் தனிப் பிரிவை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி; 3 கி.மீ வரை வரிசை: 24 மணி நேரம் காத்திருப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com