Home Loans | எஸ்.பி.ஐ. முதல் இந்தியன் ஓவர்வீஸ் வங்கி வரை பொதுத்துறை வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Home Loans | எஸ்.பி.ஐ. முதல் இந்தியன் ஓவர்வீஸ் வங்கி வரை பொதுத்துறை வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Published on: November 3, 2024 at 2:00 pm
Home Loans | பண்டிகைக் கால கொண்டாட்டமாக சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை செயலாக்கக் கட்டணங்களை முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளன. இது வீடு வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்று கூறலாம்,
தனியார் துறை வங்கிகள்
பொதுத் துறை வங்கிகள் சலுகைகள் வழங்கியுள்ள போதிலும், தனியார் துறை வங்கிகள் வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்தில் எந்த தள்ளுபடியையும் இதுவரை அறிவிக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் பொதுவாக மிகவும் கவர்ச்சிகரமான வீட்டுக் கடன் விகிதங்களை வழங்குகின்றன. இது கடன் வாங்குபவர்களுக்கு விருப்பமான தேர்வாகவும் அமைகிறது.
ஆனால், சில தனியார் வங்கிகள் 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு குறைந்தபட்சம் 8.70 சதவிகிதம் வழங்குகின்றன. அதே சமயம் பொது வங்கிகள் 30 ஆண்டுகள் வரை அதே கடனை 8.35 சதவிகிதத்தில் வழங்குகின்றன.
வங்கிகள் | வீட்டுக் கடன் விகிதங்கள் |
---|---|
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 9.35% (ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | 8.5% முதல் 9.5% |
HDFC வங்கி | 8.75% |
கோடக் மஹிந்திரா வங்கி | 8.75% இல் தொடங்குகிறது |
ஐசிஐசிஐ வங்கி | 9.25% முதல் 9.65% |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 8.4% (ஃப்ளோட்டிங்) |
பேங்க் ஆஃப் பரோடா | 8.4% முதல் 10.6% வரை (CIBIL மதிப்பெண் அடிப்படையில்) |
பாரத ஸ்டேட் வங்கி | 8.50% முதல் 9.65% |
இதையும் படிங்க எல்.ஐ.சி ஹவுசிங் லிமிடெட்; ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: வட்டி விகிதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com