Tirupati | திருப்பதியில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாகவும், இன்று பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
இதனால் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 3 கி.மீ நீளத்துக்கு மக்கள் வரிசை காணப்பட்டது.ரூ.300 தரினத்தை பொறுத்தவரை பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.
இதற்கிடையில், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி கோவிலில் (நவம்பர் 28-டிசம்பர் 6) வருடாந்திர கார்த்திகை பிரம்மோத்ஸவங்களுக்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த விழாவில், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாம்பரம்- திருச்சி, எழும்பூர்- மதுரை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Tirupati Hundi Offerings | திருப்பதி வெங்கடாசலப்பதி பெருமாள் கோவிலில், 2024ஆம் ஆண்டில் ரூ.1,365 கோடிக்கு வசூலாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன….
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது….
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன….
எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது….
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்