BSNL Recharge | பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL Recharge | பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: November 2, 2024 at 10:54 pm
BSNL Recharge | பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிக்கனமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டம் அதன் மில்லியன் கணக்கான பயனர்களுக்கு மிகக் குறைந்த செலவில் அதிக மதிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் விலை ரூ. 1,198 ஆகும், மேலும் இது சராசரி தினசரி செலவு ரூ.3.50க்கு குறைவாக உள்ளது. பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்ட விலைகளை உயர்த்தி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல்.ன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பி.எஸ்.என். ரூ.1,198 திட்டம்
இந்த திட்டத்தில், பயனர்கள் மாதத்திற்கு சுமார் ரூ.100 செலுத்துகின்றனர். சந்தாதாரர்கள் 300 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும், இது 3ஜிபி அதிவேக 3ஜி/4ஜி டேட்டாவையும் மாதத்திற்கு 30 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
மற்றொரு திட்டம்
பி.எஸ்.என்.எல் புதிய அறிமுகத்துடன் மற்றொரு 365 நாள் திட்டத்தின் விலையை குறைத்துள்ளது. இந்தத், திட்டம் ஆரம்பத்தில் ரூ.1,999க்கு கிடைத்தது, இப்போது ரூ.1,899க்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் நவ.7ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ரூ.298 ரீசார்ஜ், 52 நாள் வேலிடிட்டி: பி.எஸ்.என்.எல்.லின் இந்த ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com