Tamilisai soundararajan : “இது விஜய் அலை மட்டுமல்ல; மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு எதிரான அலையும் கூட” என பா.ஜ.க.வின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamilisai soundararajan : “இது விஜய் அலை மட்டுமல்ல; மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு எதிரான அலையும் கூட” என பா.ஜ.க.வின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 3:17 pm
Updated on: May 5, 2026 at 3:24 pm
சென்னை, மே 5, 2026: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பா.ஜ.க.வின் தமிழிசை சௌந்தரராஜன்.
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “விஜய்க்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்; ஒரே முயற்சியிலேயே அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இலக்கை எட்ட 10 இடங்கள் குறைந்திருந்தபோதிலும், அவர் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளார்” என்றார்.
விஜய்க்கு ஆதரவு கிடைக்கும்
#WATCH | Chennai | On Tamil Nadu election results, BJP leader Tamilisai Soundararajan says, “I congratulate Vijay; he has made his mark in one shot. He achieved significant numbers, even though he fell short by 10. He will receive support, and he should run a good… pic.twitter.com/0Mol5e1rJ7
— ANI (@ANI) May 5, 2026
(நன்றி: ஏ.என்.ஐ)
மேலும், “அவருக்கு ஆதரவு கிடைக்கும்; அவர் ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும்… இது வெறும் ‘விஜய் அலை’ மட்டுமல்ல; மாறாக, மு.க. ஸ்டாலினுக்கும், திமுகவின் சீர்கெட்ட ஆட்சிக்கும், மிகவும் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு சூழலுக்கும் எதிரான ஒரு எதிர் அலையாகவும் இது அமைந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க : விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா? தொல். திருமாவளவன் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com