Jharkhand Election | ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி தூதரக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jharkhand Election | ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி தூதரக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on: October 26, 2024 at 1:58 pm
Jharkhand Election | ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு தோனி புகைப்படத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார் தெரிவித்துள்ளார். அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக (விளம்பர தூதராக) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் குமார் வெள்ளிக்கிழமை (அக்.25, 2024) செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களைத் திரட்டுவதில் மகேந்திர சிங் தோனி பணியாற்றுவார்” என்றார்.
மேலும், “வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்க தோனியின் வேண்டுகோள் மற்றும் புகழைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என நாங்கள் நம்புகிறோம்.
ஜார்க்கண்டில் மொத்தம் நாற்பத்து மூன்று தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், சரிகேலா தொகுதியில் பாஜக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி இல்லை’: ஃபருக் அப்துல்லா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com