ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேம்நாத் சோரன் இன்று பதவியேற்றார்.
Published on: November 28, 2024 at 8:23 pm
Updated on: November 29, 2024 at 7:51 am
Hemant takes oath as Jharkhand CM | ஜார்கண்ட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் காங்வாரை ஜார்கண்ட் முத்தி மோட்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சராக இன்று ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் நான்காவது முறையாக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர்; தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு? ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com