இலங்கையில் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளனர்.
இலங்கையில் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியாகி உள்ளனர்.
Published on: November 28, 2024 at 6:20 pm
Srilanka flood | இலங்கையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் அந்நாட்டிலுள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக கிழக்கு கடலோர பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களிலும் நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராணுவத்தினருக்கு அதிபர் திசநாயக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க அமெரிக்கா : தேசிய ஹெல்த் ஏஜென்சி தலைவராக இந்திய வம்சாவளி நியமனம் ; டிரம்ப் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com