எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா- சீனா இடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா- சீனா இடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
Published on: November 28, 2024 at 5:18 pm
India – China disengagement Agreement | கிழக்கு லடாக்கில் நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சீனா மற்றும் இந்தியா ராணுவங்கள் “பெரிய முன்னேற்றம்” அடைந்து வருகின்றன என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வூ கியான்,
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜுன் ஆகியோர் கடந்த வாரம் லாவோஸின் தலைநகரான வியன்டியானில் பிராந்திய பாதுகாப்பு மாநாட்டின்போது, இருவரும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தினர்.
இரு நாட்டினருக்கும் இடையில் எட்டப்பட்ட தீர்வை இரு தரப்பினரும் செயல்படுத்தி வருகின்றனர். இப்போது, நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.
மேலும், உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளுக்கு இடையே நிலையான உறவுகளை மேம்படுத்தவும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“எல்லைப் பகுதிகளில் பதற்றத்தைத் தணிக்கவும், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும், இரு தரப்பும் சமீபத்தில் செய்துள்ள பொதுவான புரிதல்களை இரு ராணுவங்களும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இரு தரப்பும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ராணுவ உறவுகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்த புதிய வேகத்தை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க பாகிஸ்தானில் கண்டதும் சுட உத்தரவு: பள்ளிகள், இணையம் மூடல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com