விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: November 28, 2024 at 4:09 pm
96 – 2nd part update | பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 90 களில் உள்ள பள்ளி காதலை காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் கதை, பாடல்கள் காட்சியமைப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவை முடியும் தருவாயில் உள்ளதாகவும் இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாகவும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி – திரிஷாவை வைத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க ‘தேவையற்ற செலவு; முன்னாள் கணவருக்கு அளித்த பரிசு’: சமந்தா ஹாட் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com