அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவில் தேசிய சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
Published on: November 27, 2024 at 2:43 pm
Jay Bhattacharya | அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, அவர் பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பட்டாச்சாரியாவை நியமனம் செய்துள்ளார்.
இது குறித்த டிரம்ப்பின் அறிவிப்பில், அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குனராக ஜெய் பட்டாச்சாரியாவை நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தேசத்தின் மருத்துவ ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளவும் சுகாதார மேம்பாடு மற்றும் உயிர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான பணியிலும் ராபர்ட் எப். கென்னடி ஜூனியருடன் இணைந்து ஜெய் பட்டாச்சாரியார் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பட்டாச்சாரியா தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெய் பட்டாச்சார்யா?
டிரம்பின் அமைச்சரவையில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி இடம் பெற்றிருக்கிறார். அவர் எலான் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவார். இதேபோன்று, முதல் இந்து பெண்ணான துளசி கபார்டும் டிரம்ப் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க இந்தியா வரும் இங்கிலாந்து மன்னர், ராணி: எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com