வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ; இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

RMC Chennai | Rain Alert | வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Published on: October 18, 2024 at 1:50 pm

RMC Chennai | Rain Alert | மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (17-10-2024) அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21,10,2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34′ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க

மகாராஷ்டிரா தேர்தல்; 115 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்? Maharashtra Congress Eyes 100 to 115 Seats as MVA Strikes

மகாராஷ்டிரா தேர்தல்; 115 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்?

Maharashtra | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 115 தொகுதிகள் வரை கேட்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது….

நீங்க ரொம்ப ஷார்ப்பா; அப்ப இத கண்டுபிடிங்க பார்ப்போம்! optical illusion Find the number '0045' hidden in many 00A5s

நீங்க ரொம்ப ஷார்ப்பா; அப்ப இத கண்டுபிடிங்க பார்ப்போம்!

Optical Illusion | பல 00A5களில் மறைந்திருக்கும் ‘0045’ எண்ணை கண்டுபிடிங்க. சரியான விடையை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 9 விநாடிகள் மட்டுமே!…

பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி pm narendra modi to go to Russia for brics summit

பிரிக்ஸ் உச்சிமாநாடு ; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா செல்கிறார்….

பீகார் ; கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு bihar spurious liquor death toll rises to 33

பீகார் ; கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

Bihar | பீகாரில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது….

சென்னை டிவியில் இந்தி மாதக் கொண்டாட்டம் ; அப்பட்டமான இந்தி திணிப்பு ; டாக்டர். ராமதாஸ் dr ramadoss condemned Hindi month celebration on Chennai TV is blatant Hindi stuffing

சென்னை டிவியில் இந்தி மாதக் கொண்டாட்டம் ; அப்பட்டமான இந்தி திணிப்பு ;

Dr Ramadoss | சென்னை டிவியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com