சென்னை டிவியில் இந்தி மாதக் கொண்டாட்டம் ; அப்பட்டமான இந்தி திணிப்பு ; டாக்டர். ராமதாஸ்

Dr Ramadoss | சென்னை டிவியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 1:21 pm

Dr Ramadoss | சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டம் நடத்தப்படுவது அப்பட்டமான இந்தி திணிப்பு முயற்சி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் இன்று மாலை நடைபெறும் என்றும், அந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலானவர்களால் பேசப்படும் 122 மொழிகளும், 1599 பிற மொழிகளும் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு எனும் போது ஒரு மொழியை மட்டும் கொண்டாடுவதற்கு எந்த நியாயமும் இல்லை. 1700-க்கும் கூடுதலான மொழிகள் பேசப்படும் நாட்டில், அதிலும் குறிப்பாக உலகின் மூத்த மொழியான தமிழ் பேசப்படும் மாநிலத்தில் இந்திக்கு மட்டும் விழா எடுக்கப்பட்டால் அது நாட்டின் பன்முகத்தன்மையை பாதிக்கும். இதற்கு மத்திய அரசே காரணமாக இருக்கக் கூடாது.

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இந்தி நாட்டின் அலுவல் மொழியாக 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி இந்தி நாளும், இந்தி மாதமும் கொண்டாடப்படுவது நியாயம் என்றால், அதே கொண்டாட்ட உரிமை தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26.01.1950-ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதே அதன் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. அந்த நாளை தமிழ் மொழி நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். அவற்றை செய்யாமல் இந்திக்கு மட்டும் கொண்டாட்டங்களை நடத்துவது பிற மொழிகளை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது? எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 100 நாள்களில் ரூ.100 கோடி என வலை; தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகரிப்பு: மருத்துவர் ராமதாஸ்

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சி குளறுபடி; அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss says there is a problem in the National Scholarship Examination results

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சி குளறுபடி; அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி இருப்பதாகவும், திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

முடிவுக்கு வருமா பாமக உள் கட்சி விவகாரம்? அன்புமணியுடன் வடிவேல் இராவணன் சந்திப்பு..! Vadivel Ravana meets Anbumani

முடிவுக்கு வருமா பாமக உள் கட்சி விவகாரம்? அன்புமணியுடன் வடிவேல் இராவணன் சந்திப்பு..!

Vadivel Ravana meets Anbumani: மருத்துவர் அன்புமணி ராமதாசை வடிவேல் ராவணன் சந்தித்து பேசினார். பாமக உள்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்.. தொண்டர்களுக்கு அன்புமணி மடல்! Doctor Anbumani Ramadoss says he will continue to lead the PMK

பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்.. தொண்டர்களுக்கு அன்புமணி மடல்!

Doctor Anbumani Ramadoss: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு புகழ் சேர்க்கும் வகையில், “பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்” என தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல்…

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் பதில்!

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடருமா? மருத்துவர் ராமதாஸ் பதில்!

Dr Ramadoss: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பா என்ற கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அதிரடியாக பதில் அளித்தார்….

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்! Anbumani Ramadoss

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி

Anbumani Ramadoss: சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி சரிவு: அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்! Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி சரிவு: அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி 0.15 சதவீதம் ஆக சரிந்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com