Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
India vs Pakistan: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்தது….
Cryptocurrency investment: கிரிப்டோகரன்சி முதலீடு ஹராம் என பாகிஸ்தானின் பிரதான மதக்குரு ஒருவர் அறிவித்துள்ளார். இது டிஜிட்டல் முதலீடு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Rangers Fire on PoJK Protesters : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இதில் ஒருவர் உயிரிழந்தார்….
40 Die in Pakistan Bus Crash : பாகிஸ்தான் நாட்டில் ஷெரானி-ஜோப் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்; 8 பேர்…
India, Pakistan Prisoner Exchange : இந்தியா- பாகிஸ்தான் சிறைக் கைதிகள் பரிமாற்றம் புதன்கிழமை நடைபெற்றது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்