Jharkhand | ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி எம்.எல்.ஏ கல்பனா சோரன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள்.
இதற்கிடையில், அக்டோபர் 12-ம் தேதி விஜயதசமி அன்று டெல்லியில் இருந்து சோரன் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வட்டாரங்கள், இரு கட்சிகளுக்கும் இடையே சில இடங்கள் தொடர்பாக ஆரம்பகால மோதல்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன.
மேலும், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி குறித்தும் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், “ஹரியானா முடிவுகளில் இருந்து பாடம் கற்று, ஜார்கண்ட் தேர்தலில் இதேபோன்ற விளைவுகளைத் தவிர்க்க இந்திய கூட்டணி அதிக பலத்துடன் போட்டியிடும்” என்றார்.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30-40 இடங்களில் வெற்றி பெற்றால், ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் சமீபத்தில் கூறினார். இதனால் ஜார்க்கண்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர்கள் ஜேஎம்எம் நினைத்தால் தனித்துப் போட்டியிடும் என்றார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்….
காங்கிரஸ், தி.மு.க அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்….
Rahul gandhi: வாக்கு திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் பரப்புரை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது….
Congress MP Shashi Tharoor: நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு காங்கிரஸின் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் பதிலளித்தார்….
Tamil News Highlights June 19 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்