Ratan Tata Health Condition | மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அக்.7ஆம் தேதி ரத்தன் டாட்டா தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நிராகரித்தார். வயது தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “எனது வயது தொடர்பான உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 86 வயதான அவர் தனது உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு உறுதியளித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
Train fare hike: இந்திய ரயில்வே டிசம்பர் 26, 2025 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது….
Sonia Gandhi on VB-G RAM G: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மேல் மத்திய பாஜக அரசு புல்டோசர் தாக்குதலை நடத்தியுள்ளது;…
Delhi on Orange alert : டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அதிகப்படியான மாசை சந்தித்து வரும் நிலையில், இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….
Assam Train Accident: அசாமில் இருந்து டெல்லி நோக்கி வந்த, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 காட்டு யானைகள் உயிரிழந்தன; இதில் காயமுற்ற ஒரு யானைக்கு…
PM Narendra Modi’s international awards: கடந்த 11 ஆண்டுகளில் 29 சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்