நவராத்திரி ஸ்பெஷல் 2024; அதிரசம் இப்படி பண்ணுங்க: ருசி அள்ளும்!

How to make navrathri special adhirasam | வெங்கடேஷ் பட் ஸ்டைலில் அதிரசம் இப்படி பண்ணுங்க

Published on: October 3, 2024 at 8:55 pm

How to make navrathri special adhirasam | நவராத்திரி 2024 தொடங்கியுள்ள நிலையில், வெங்கடேஷ் பட் ஸ்டைலில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி -300 கிராம்
தண்ணீர் – 2 டம்ளா்
நாட்டு சக்கரை – 1 (1|2) கப்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் -1 சிட்டிகை
சுக்குத்தூள் – அரை சிட்டிகை
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு கப் பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்ட வேண்டும். ஈரப்பதத்துடன் இருக்கும் அரிசியை மாவு போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த அரிசி மாவில் இருந்து தலை தட்டி இரண்டு கப் அரிசி மாவினை எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரிசி அளந்த அதே அளவையால் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் ஒன்றரை கப் 1 (1/2) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பாகு பதத்தில் காய்க்க வேண்டும்.

பாகுபதத்தை கண்டறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு துளி காய்த்த பாகினை சேர்க்கும் பொழுது பாகு நீரில் கரையாமல் இருக்கும். இது சரியான பதம் ஆகும். அடுப்பு தீயை சிம்மில் வைத்து பாகுடன் அளந்து வைத்த அரிசி மாவு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இதனுடன் மீண்டும் இரண்டு கைப்பிடி அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இந்த கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னா் இதனுடன் சிறிது நெய் சேர்த்து 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். மாவு நன்கு ஊறிய பின் சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும். இதை வடை போன்று தட்டி எண்ணெயில் சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான அதிரசம் தயார்.

இதையும் படிங்க

நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்! Healthy Navratri Fasting

நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள்!

Healthy Navratri Fasting: நவராத்திரி விரதத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? நிபுணர்கள் கூறும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்….

52 வயதில் இளமையான தோற்றம்.. முதலமைச்சர் விஜயின் உணவு இரகசியம் என்ன? Vijay fitness

52 வயதில் இளமையான தோற்றம்.. முதலமைச்சர் விஜயின் உணவு இரகசியம் என்ன?

Vijay fitness: விஜய் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை அளவோடு சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது….

வேப்பம்பூவை இந்த முறையில் செய்து பாருங்கள்.. கசப்பே தெரியாது! Food

வேப்பம்பூவை இந்த முறையில் செய்து பாருங்கள்.. கசப்பே தெரியாது!

Food: எளிமையான முறையில் சுவையான வேப்பம்பூ பொரியல் இப்படி செய்து பாருங்க….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com