ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது?..அமைச்சர் தகவல்

Rajinikanth health condition | நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published on: October 1, 2024 at 1:44 pm

Updated on: October 1, 2024 at 1:46 pm

Rajinikanth health condition | நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடி வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடமும் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். 2011-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூரின் உயர்மட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு , அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், 2021ல் ரஜினிக்கு கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது, ​​அவர் டிரான்ஸ்கேட்டர் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் ரிப்பேர் (TEVAR) எனப்படும் உயர்தர மருத்துவ செயல்முறைக்கு உட்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை ஏதும் செய்யப்படவில்லை. தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க

பாட்ஷா, பேட்ட 2ம் பாகம் நடிக்க மறுப்பு.. ஜெயிலர் 2 நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? ரஜினிகாந்த் Rajinikanth

பாட்ஷா, பேட்ட 2ம் பாகம் நடிக்க மறுப்பு.. ஜெயிலர் 2 நடிக்க ஒப்புக்கொண்டது

Rajinikanth: பாட்ஷா, பேட்ட உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், ஜெயிலர் 2 நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்….

நவராத்திரி கொலுவில் ரஜினிகாந்தின் 230 அவதாரங்கள்.. அசத்திய தீவிர ரசிகர் Rajinikanth's Avatars

நவராத்திரி கொலுவில் ரஜினிகாந்தின் 230 அவதாரங்கள்.. அசத்திய தீவிர ரசிகர்

Rajinikanth’s Avatars: நவராத்திரி கொலுவில் ரஜினிகாந்தின் 230 அவதாரங்கள் இடம்பெற்றுள்ளன….

நம்ப முடியவில்லை ஆருயிர் நண்பா.. நானா படேகர் மறைவு குறித்து ரஜினிகாந்த்! Rajinikanth

நம்ப முடியவில்லை ஆருயிர் நண்பா.. நானா படேகர் மறைவு குறித்து ரஜினிகாந்த்!

Rajinikanth: நானா படேகரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தனது அன்புக்குரிய நண்பர் இனி நம்முடன் இல்லை என்பதை தன்னால் நம்ப முடியவில்லை…

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஐமேக்ஸ் திரையில் வெளியீடு.. எகிறும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு! Jailer 2

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஐமேக்ஸ் திரையில் வெளியீடு.. எகிறும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Jailer 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன….

‘ஜெயிலர் 2’மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு.. ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம்! Suraj Venjaramoodu

‘ஜெயிலர் 2’மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு.. ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம்!

Suraj Venjaramoodu: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மிரட்டலான தோற்றத்தில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் ‘திலீப்’ கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com