திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு : இப்படி செய்து பாருங்கள்!

How to make sothi kulambu | திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Published on: October 1, 2024 at 12:44 pm

How to make sothi kulambu | திருமணமான மணமகனுக்கு மறு வீட்டின் போது செய்து பரிமாறக் கூடிய ஆரோக்கியமான உணவு சொதி குழம்பு ஆகும். தேங்காய் பால் பயன்படுத்தி செய்யக்கூடிய, சத்தான ஆரோக்கியமான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

சிறு பருப்பு – 100 கிராம்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கிராம்பு- 5
பட்டை – சிறிய துண்டு
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூல்
மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்லு
சிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – 2
பீன்ஸ் – 10
உருளைக்கிழங்கு -2
முருங்கைக்காய் – 1
பட்டாணி – சிறிதளவு
தேங்காய் பால் – 300 ml
தேங்காய் எண்ணெய் – 50 ml
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு குக்கரில் பருப்பு சேர்த்து பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை நன்கு கழுவி நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு, சீரகம், பட்டை, கிராம்பு, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் அரைத்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுதினை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இந்த தருணத்தில் குழம்புக்கு தேவையான உப்பினை சேர்த்து மூன்று நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். இந்த கலவையுடன் வேக வைத்த சிறு பருப்பைசேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இவை கொதித்ததும் இதனுடன் கெட்டியான தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.

தேங்காய்ப்பால் சேர்த்த பின்னர் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பினை ஆஃப் செய்ய வேண்டும். இப்போது சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு தயார். இந்த சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, நான், மற்றும் சுடு சோறுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க

பள்ளிவாசல் நோன்பு கஞ்சி.. அதே சுவையில் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் Food

பள்ளிவாசல் நோன்பு கஞ்சி.. அதே சுவையில் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்

Food: பள்ளிவாசலில் கிடைப்பது போல் நோன்பு கஞ்சி இப்படி ட்ரை பண்ணுங்க….

ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க.. Food

ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க..

Food: ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி வீட்டிலேயே எளிமையாக இப்படி பண்ணுங்க….

காரசாரமான பேபி கார்ன் மிளகு கறி.. இப்படி ட்ரை பண்ணுங்க! Food

காரசாரமான பேபி கார்ன் மிளகு கறி.. இப்படி ட்ரை பண்ணுங்க!

Food: கல் தோசை, சப்பாத்திக்கு சூப்பரான காமினேஷன். பேபி கார்ன் மிளகு கறி இப்படி செய்து அசத்துங்க….

வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்யலாம்! Food

வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்யலாம்!

Food: கோடைக்காலம் நெருங்கும் நிலையில், வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்….

உருளைக்கிழங்கு ரோஸ்ட்னா இப்படி இருக்கணும்.. வீட்ல செஞ்சு அசத்துங்க! Food

உருளைக்கிழங்கு ரோஸ்ட்னா இப்படி இருக்கணும்.. வீட்ல செஞ்சு அசத்துங்க!

Food: சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்க சூப்பரான உருளைக்கிழங்கு ரோஸ்ட் இப்படி பண்ணுங்க….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com