பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளம் பெருக அரசு துணை நிற்கும்.. முதலமைச்சர் விஜய் உறுதி

Milk Producers Welfare: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் வளமும் மகிழ்ச்சியும் பெருகவும் தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

Published on: November 26, 2026 at 12:31 pm

சென்னை, நவ.26, 2026: தேசிய பால் தினத்தையொட்டி, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வெண்மைப் புரட்சி மூலம் இந்தியாவின் பால்வளத்தைப் பெருக்குவதில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய பால் தினம் கொண்டாடப்படுகிறது.

பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!

மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி வழங்கியுள்ளதாகவும், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் வளமும் மகிழ்ச்சியும் பெருக தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம்: கவர்னர் அர்லேகரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார்!

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!
Constitution Day 2026

ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி தழைத்தோங்கட்டும்.. அரசியலமைப்பு நாளில் முதல்மைச்சர் விஜய் வாழ்த்து!

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Cauvery Gundar Link Project

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com