Kanyakumari House Theft: கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் பூட்டியிருந்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kanyakumari House Theft: கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் பூட்டியிருந்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: November 22, 2026 at 11:47 am
கன்னியாகுமரி, நவ.22, 2026: கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் பூட்டியிருந்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் ஆட்டோ ஓட்டுநராகவும், அவரது மனைவி நளினி (39) தனியார் நிதி நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
மாலையில் வீடு திரும்பிய நளினி, முன்பக்கக் கதவு இரும்புக் கம்பியால் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு, டிராயரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நளினி அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் கதவை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com