Chennai AI Traffic Surveillance: சென்னை நெடுஞ்சாலைகளில் 65.6 கி.மீ. தூரத்துக்கு செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது.
Chennai AI Traffic Surveillance: சென்னை நெடுஞ்சாலைகளில் 65.6 கி.மீ. தூரத்துக்கு செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 20, 2026 at 1:13 pm
Updated on: November 20, 2026 at 1:14 pm
சென்னை, நவ.20, 2026: சென்னையின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நவீன போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
இதன்படி, 32.6 கி.மீ. நீளமுள்ள சென்னை பைபாஸ் சாலை மற்றும் 33 கி.மீ. நீளமுள்ள சென்னை – தடா தேசிய நெடுஞ்சாலை என மொத்தம் 65.6 கி.மீ. தூரத்துக்கு இந்தக் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதிவேகம், தவறான பாதையில் பயணித்தல் உள்ளிட்ட விதிமீறல்களை நவீன கேமராக்கள் மூலம் கண்டறிய முடியும்.
மேலும், சாலைகளில் உள்ள பள்ளங்கள், சேதமடைந்த சாலை அடையாளங்கள், மழைநீர் தேக்கம், சேதமடைந்த தடுப்புகள் உள்ளிட்ட குறைபாடுகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்டறிய முடியும். விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து மின்னணு அபராதம் விதிக்கவும் இந்தத் திட்டம் உதவும்.
இதற்காக 80 போக்குவரத்துக் கண்காணிப்பு கேமரா இடங்கள், 12 விதிமீறல் கண்டறியும் இடங்கள், 4 வேகக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன. சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். திட்டப் பணிகள் 8 மாதங்களில் முடிக்கப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி.. 2.1% அதிகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com