Anbil Mahesh Judicial Custody: அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் டிச. 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Anbil Mahesh Judicial Custody: அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் டிச. 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published on: November 18, 2026 at 3:22 pm
சென்னை, நவ.18, 2026: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 2-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.400 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (நவ.18) காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஷின் காவலை டிசம்பர் 2 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, அவருக்கு பிணை வழங்கக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க : காவிரி நீர்பகிர்வு துணைத் தலைவர் தேர்வு எப்போது? அண்ணாமலை கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com