Rabi Season Fertiliser Subsidy: ரபி பருவ உர மானியத்துக்கு ரூ.62,370 கோடி ஒதுக்கீடு வழங்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Rabi Season Fertiliser Subsidy: ரபி பருவ உர மானியத்துக்கு ரூ.62,370 கோடி ஒதுக்கீடு வழங்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Published on: November 13, 2026 at 12:55 pm
புதுடெல்லி, நவ.13, 2026: 2026–27-ம் ஆண்டுக்கான ரபி பருவத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு (P&K) ரூ.62,370 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2025–26 ரபி பருவத்தில் ரூ.37,952 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.24,418 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானியத் தொகை சுமார் 64.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த மானியத் திட்டம் 2026 அக்டோபர் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். டி.ஏ.பி. (DAP), என்.பி.கே.எஸ். உள்ளிட்ட 28 வகையான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு இந்த மானியம் பொருந்தும்.
சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மைக்ரோ கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு.. ரூ.43.34 லட்சம் கோடி கடன் வழங்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com