மைக்ரோ கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு.. ரூ.43.34 லட்சம் கோடி கடன் வழங்கல்!

Micro Enterprise Loan Scheme Extension: குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published on: November 13, 2026 at 12:08 pm

புதுடெல்லி, நவ.13, 2026: பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இத்திட்டம் 2031 மார்ச் 31-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

இதற்காக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.12.6 லட்சம் கோடி மதிப்பிலான முத்ரா கடன்களை வழங்க வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குறு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும், ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.10,000 வரையிலும் மிகைப்பற்று வசதிக்கும் கடன் உத்தரவாதம் வழங்கப்படும். மேலும், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட அளவிலான கடன்களும் இத்திட்டத்தில் இடம்பெறும்.

கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கான ஆண்டு உத்தரவாதக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் நிலவரப்படி, முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 60.36 கோடிக்கும் அதிகமான கடன்கள், ரூ.43.34 லட்சம் கோடி மதிப்பில் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2026 செப்டம்பர் நிலவரப்படி, பிரதமரின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.43.34 லட்சம் கோடி மதிப்பிலான 60.36 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்த தங்கம் விலை.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com