பொங்கல் ரயில் டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.. பரபரப்பு தகவல்கள்!

Pongal Train Ticket Booking: பொங்கல் ரயில் டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

Published on: November 13, 2026 at 11:48 am

சென்னை, நவ.13, 2026: அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ.13) காலை 8 மணிக்குத் தொடங்கியது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதியும், போகிப் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏராளமானோர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்துள்ளனர். இதன்படி, ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் அதிகளவில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் கடும் போட்டி நிலவியது.

ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு நவம்பர் 15ஆம் தேதியும் தொடங்குகிறது.

இதையும் படிங்க : ஜாமீன் கோரும் அன்பில் மகேஷ்.. சென்னை ஐகோர்ட்டில் மனு!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com