Kanda Sashti : “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழியின் திரிபு.
Kanda Sashti : “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது “சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழியின் திரிபு.

Published on: November 10, 2026 at 6:33 pm
Updated on: November 10, 2026 at 6:42 pm
திருச்செந்தூர், நவ.10, 2026: கந்த சஷ்டி விரதம் முருக வழிபாட்டின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் மீது கொண்ட பக்தியால், பக்தர்கள் ஆறு நாட்கள் விரதமிருந்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்திலேயே தங்கி, கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
கந்த சஷ்டி விரதம் மனவலிமை, ஆன்மிக ஒழுக்கம் மற்றும் இறைநம்பிக்கையை வளர்ப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆறாம் நாள் நடைபெறும் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு விரதத்தை நிறைவு செய்து, முருகப்பெருமானிடம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்திக்கின்றனர்.
தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம் உலகெங்கும் உள்ள முருக பக்தர்களால் போற்றப்படும் பக்திப் பாடலாகும். இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் மன அமைதியும் இறையருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும், “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி, சஷ்டி விரதத்தின் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.. அமைச்சர் ரமேஷ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com