Avadi Air Force School Recruitment: ஆவடி விமானப்படை பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; 10ஆம் வகுப்பு படித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.
Avadi Air Force School Recruitment: ஆவடி விமானப்படை பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; 10ஆம் வகுப்பு படித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.

Published on: November 9, 2026 at 1:15 pm
சென்னை, நவ.9, 2026: சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 காலிப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில், கணினி அறிவியல் ஆசிரியர் (TGT Computer Science) பணிக்கு ஒரு காலியிடமும், கணினி ஆய்வக உதவியாளர் (Lab Attendant) பணிக்கு ஒரு காலியிடமும், உதவியாளர் (Helper) பணிக்கு ஒரு காலியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கு தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆய்வக உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மாதச் சம்பளமாக முறையே ரூ.33,000, ரூ.14,000 மற்றும் ரூ.13,000 வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் விமானப்படை பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 9, 2026 ஆகும்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி’ மடிக்கணினி திட்டம்.. ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com