பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!

Periyar Arivulagam Book Purchase Scam: பெரியார் அறிவுலகம் புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் அளித்துள்ளது.

Published on: November 8, 2026 at 2:32 pm

சென்னை, நவ.8, 2026: கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் நவம்பர் 7ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார். புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்த அதிகாரிகள் யார்? புத்தகங்கள் முறையாகத் தேர்வு செய்யப்பட்டனவா? கொள்முதல் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டதா? சர்ச்சைக்குரிய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உண்மையில் உள்ளனரா? எனப் பல்வேறு கேள்விகளை திமுக எழுப்பியுள்ளது.

புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட தேதிகள், அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்ட விவரங்கள் மற்றும் ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை உள்ளிட்ட 8 முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

இதையும் படிங்க : மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கூடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com