குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைப்பு.. தமிழ்நாடு அரசு

Centre-State Relations Panel: மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் குரியன் ஜோசப் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

Published on: November 7, 2026 at 6:02 pm

சென்னை, நவ.7, 2026: மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 2025 ஏப்ரல் 17ஆம் தேதி உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் இந்தக் குழு செயல்பட்டு வந்தது.

இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அரசியலமைப்புச் சட்டம், மத்திய – மாநில அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்வது இக்குழுவின் நோக்கமாக இருந்தது.

இக்குழு தனது முதல் ஆய்வறிக்கையை கடந்த 2026 பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இரண்டாம் கட்ட அறிக்கையை 2027 மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது குழுவின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இக்குழுவின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமையும், முரண்பாடான பணிமீளுருவாக்கமும் இருப்பதாகக் குறிப்பிட்டு, நவம்பர் 6ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், குழுவின் ஆவணங்களை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பெரியார் பெயரால் மக்கள் பணம் கொள்ளை.. தி.மு.க. மீது விஜய் குற்றஞ்சாட்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com