முரசு புயல் தாக்கம்.. சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மாயம்!

Cyclone Murasu: முரசு புயல் தாக்கம் காரணமாக. சென்னையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளார்கள்.

Published on: November 4, 2026 at 4:42 pm

Updated on: November 4, 2026 at 4:43 pm

சென்னை, நவ.4, 2026: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்றனர். முரசு புயல் காரணமாக கடலில் மோசமான வானிலை நிலவிய நிலையில், அவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வானிலை எச்சரிக்கை காரணமாகக் கரைக்குத் திரும்புமாறு படகு உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மோசமான வானிலை காரணமாகத் திரும்ப முடியாததால், மற்றொரு படகின் அருகே நங்கூரமிட்டு நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி மாலை 3 மணியுடன் அந்தப் படகில் இருந்த மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மறுநாள் காலையில், அந்தப் படகு நங்கூரமிட்டிருந்த இடத்தில் காணப்படவில்லை என மற்ற மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் 9 மீனவர்களின் நிலை குறித்து கவலை அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாயமான மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்கக் கோரி மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையிடம் புகார் அளித்துள்ளனர். கடலோரக் காவல் படையினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : தென்காசி அருகே ரயில் மோதி புலி உயிரிழப்பு.. வனத்துறையினர் விசாரணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com