புதிய தமிழ்ப் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள் அனுமதி.. தமிழக அரசு

Deepavali Movie Show Permission: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய தமிழ்ப் படங்களுக்கு தினமும் 6 காட்சிகள் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 4, 2026 at 12:48 pm

சென்னை, நவ.4, 2026: தமிழ்நாட்டில் வெளியாகும் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு, வெளியீட்டுத் தேதியிலிருந்து முதல் ஒரு வாரத்திற்கு தினமும் ஆறு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை ஆறு காட்சிகளுக்கு மிகாமல் திரையிடலாம். மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளின்படி, திரையரங்குகளில் தினமும் நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி இருந்தது. புதிய தமிழ்ப் படங்கள் வெளியான முதல் வாரத்தில் ஐந்து காட்சிகள் திரையிட ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆறு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிங்க : 224 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!
Sai Pallavi

சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com