Donald Trump: அமெரிக்க செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Donald Trump: அமெரிக்க செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Published on: November 4, 2026 at 11:35 am
நியூயார்க், நவ.4, 2026: அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமெரிக்க செனட் சபையில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதுடன், அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலைவாசி, ஈரான் உடனான போர் மற்றும் அரசின் ஊழல் குறித்த கவலைகள் ஆகியவை தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ட்ரம்ப் மீது வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த பல மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி இதுவரை 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாடு யாருக்கு என்பது இறுதி முடிவாகவில்லை.
செனட் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், ட்ரம்பின் அடுத்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அவரது கொள்கைகளைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், அரசின் நடவடிக்கைகள் மீதான விசாரணைகள் மற்றும் கண்காணிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்.. இந்திய மாலுமி உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com