Abhijeet Dipke: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Abhijeet Dipke: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Published on: November 2, 2026 at 12:14 pm
புதுடெல்லி. நவ.2, 2026: காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போதும், தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டபோதும் மம்தா ஆதரவாக இருந்ததாக அபிஜீத் தீப்கே தெரிவித்தார்.
இதற்கிடையே, வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தியா கூட்டணியின் பேரணிக்கு CJP ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் தங்கள் அமைப்பு நேரடியாகப் பங்கேற்காது என்றும், நடுநிலையான தனித்துவ அமைப்பாகத் தொடர்ந்து செயல்படும் என்றும் தீப்கே கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்களில் இளைஞர்கள் ஆற்றிய பங்கை மம்தா பானர்ஜி பாராட்டினார். மேலும், அபிஜீத் தீப்கே உள்ளிட்டோருக்கு மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க :இந்திரா காந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் அன்னா ஹசாரே வரை.. டெல்லி ராம்லீலா மைதான வரலாறு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com