CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
CM Vijay: நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: November 1, 2026 at 6:24 pm
சென்னை, நவ.1, 2026: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தற்போது வெவ்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் விஜயின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சுமார் 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com