தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள்.. டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

TNEB Recruitment 2026: தமிழக மின்வாரியத்தில் 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு.

Published on: October 31, 2026 at 3:39 pm

சென்னை, அக்.31, 2026: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) 2026-27ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ இன்ஜினியரிங் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 455 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் 35 இடங்களும், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட துறைகளில் முழுநேர டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறாது. டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படுவதுடன், மாதம் ரூ.10,900 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தேசிய அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டத்தின் இணையதளமான NATS இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 28, 2026 ஆகும். கூடுதல் விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழக அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.. முதலமைச்சர் விஜய் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com