தவெக அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் ஓர் எச்சரிக்கை மணி.. மு.க.ஸ்டாலின்

DMK Protest Against TVK: தவெக அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி போராட்டம் ஓர் எச்சரிக்கை மணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: October 31, 2026 at 11:57 am

சென்னை, அக்.31, 2026: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறி, தவெக அரசைக் கண்டித்து நாளை (அக்.31) மாநிலம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், நாளைய போராட்டம் தூங்கிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பின்னோக்கிச் செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அரசு, அவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களை சமூக வலைதளங்கள் மூலம் விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய் முதலில் தனது முதலமைச்சர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்த ஸ்டாலின், ஆட்சி நிர்வாகத்தைத் தட்டியெழுப்பும் வகையில் நாளைய போராட்டம் அமையும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : ஓபிஎஸ் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு!
Rain Alert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com