Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 13, 2026 at 5:57 pm
திருநெல்வேலி, அக்.13, 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரிகளுக்கான உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் பணியிடம் ஒன்று, இளநிலை உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க் பணியிடம் ஒன்று, அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 42 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் (Assistant Cum Session Clerk) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். இப்பணிக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும். இளநிலை உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க் (Junior Assistant Cum Bench Clerk) பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் திறனும் தட்டச்சுத் திறனும் தேவை. இப்பணிக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது; மாத ஊதியம் ரூ.13,000 ஆகும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 13.10.2026 (இன்று) என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் காலக்கெடுவைக் கவனித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்துச் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க : ரயில்வேயில் 3,548 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் நவம்பர் 6 வரை விண்ணப்பிக்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com