அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டம்!

Edappadi Palaniswami: அதிமுகவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன; பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published on: October 13, 2026 at 4:53 pm

சென்னை, அக்.13, 2026: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் மீண்டும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 12-ஆம் தேதி சென்னையில் வேலுமணியின் இல்லத்தில் சண்முகம், நத்தம் ஆர். விஸ்வநாதன், தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்து, இரு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கும் தலைமை எடுத்த முடிவுகளுக்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அதிருப்தி அணியினர் வலியுறுத்த உள்ளனர். சட்டப்பேரவையில் தனி அணியாகச் செயல்படுவதற்கான முந்தைய முயற்சியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

இந்த நிலையில், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் தோல்விகள், தலைமை செயல்பாடு மற்றும் அமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க அதிருப்தி அணியினர் திட்டமிட்டுள்ளனர். அவர் பொதுக்குழுவைக் கூட்ட மறுத்தால், அதை முன்னெடுப்பதற்கான மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவுக்குள் நிலவும் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : ஜெம் வீரமணி சிறார்கள் வன்கொடுமை வழக்கு.. அருண், கண்ணனிடம் 3 மணி நேரம் விசாரணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com