டெல்லியில் ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி மீது 4 எஃப்.ஐ.ஆர் பதிவு?

Rahul Gandhi: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் இதுவரை 4 எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளனர்.

Published on: October 9, 2026 at 11:35 am

புதுடெல்லி, அக்.9, 2026: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய தொடர் போராட்டம் மோதலாக மாறியது. இந்தப் போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் இதுவரை 4 எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களின் பணியைத் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன், பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் 163-வது பிரிவை மீறியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 7-ம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் மோதல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் 91 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்காளர் பட்டியலில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையில், போலீசாரை தாக்கியதாகவும், அரசு பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க : போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.. போலீசாரல் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com