Anbumani Ramadoss: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: October 8, 2026 at 3:30 pm
சென்னை, அக்.8, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டுக்கான தொகுதி 4 போட்டித்தேர்வுகளின் மூலம் 46 பணிகளுக்கு மொத்தம் 6,574 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜிழிறிஷிசி) அறிவித்துள்ளது. அரசுத்துறைகளில் 2 லட்சத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில், நடப்பாண்டிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களே நிரப்பப்படவிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமாகவும், இரு லட்சம் புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதன் வாயிலாகவும் மொத்தம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டன. அரசு வேலைகளை வழங்குவதில் திமுக அரசு தோல்வியடைந்தது.
நடப்பாண்டில் குறைந்தது 60 ஆயிரம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்; நான்காம் தொகுதி போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குருவாயூர்–சென்னை, நாகர்-கோவை ரயில்கள் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com