தீபாவளிக்கு முன் அரிசி விலை கிலோ ரூ.100 வரை உயரக்கூடும்? ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Rice Price Hike: தமிழகத்தில் அரிசி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சன்ன ரக அரிசியின் விலை கிலோ ரூ.100 வரை உயரக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: October 7, 2026 at 2:15 pm

சென்னை, அக்.7, 2026: தமிழகத்தில் அரிசி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சன்ன ரக அரிசியின் விலை கிலோ ரூ.100 வரை உயரக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாததால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படுகிறது. தற்போது பல மாநிலங்களிலும் உற்பத்தி மற்றும் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்திலும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மூட்டை அரிசியின் விலை ஏற்கனவே ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. உதாரணமாக, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1,800-க்கும், ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி ரூ.1,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இட்லி அரிசி ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், பச்சரிசி ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதனிடையே, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நெல் வரத்து தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த உற்பத்தி ஆகியவை தொடர்ந்தால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நெல் வியாபாரிகள், கமிஷன் ஏஜென்டுகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம், நெல் வரத்து வரும் மாதங்களில் அதிகரித்தால் விலை நிலைமை சீராகலாம் என தமிழ்நாடு ரைஸ் மில் ஓனர்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தீபாவளி நெருங்கும் நிலையில் அரிசி விலை உயர்வு பொதுமக்களின் குடும்பச் செலவில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு.. இந்திய பணம் அழுத்தத்தை சந்திப்பது ஏன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com