பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்.. விநாயகர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகா மந்திரில் இன்று வழிபாடு மேற்கொண்டார்.

Published on: October 7, 2026 at 12:39 pm

புதுடெல்லி, அக்.7, 2026: பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகா மந்திரில் இன்று வழிபாடு மேற்கொண்டார். விநாயகருக்கு பூஜை மற்றும் ஆரத்தி செய்த அவர், நாட்டில் உள்ள மக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பதவியேற்றதன் மூலம் நரேந்திர மோடியின் அரசுத் தலைவர் பயணம் தொடங்கியது. குஜராத் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்த அவர், 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரதமராக நீடித்து வருகிறார். இதன் மூலம் 2001 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசுத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

விநாயகர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார். தடைகளை நீக்குபவர் என அழைக்கப்படும் விநாயகரின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும், நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால அரசுப் பயணத்தைப் பாராட்டி மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. குஜராத் முதல் டெல்லி வரையிலான அவரது பயணத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு ஆட்சி மற்றும் நலத்திட்டங்களை அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது. 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இதையும் படிங்க : ரிலையன்ஸ் நிர்வாகிக்கு ராஜ்ய சபா சீட்.. புயலை கிளப்பிய அகிலேஷ் யாதவ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com