Washington Sundar: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
Washington Sundar: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

Published on: October 4, 2026 at 12:09 pm
Updated on: October 4, 2026 at 12:10 pm
சென்னை, அக்.4, 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு முக்கிய பங்காற்றியது. இறுதிப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் விஜய், அவரது சாதனை இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :குத்துச் சண்டையை விட்டு விலக நினைத்தேன்.. லோவ்லினா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com