குத்துச் சண்டையை விட்டு விலக நினைத்தேன்.. லோவ்லினா

Asian Games 2026: “தாம் குத்துச் சண்டை போட்டிகளை விட்டு விலக நினைத்தேன்; எனினும் தொடர்ந்தேன் என ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் லோவ்லினா தெரிவித்துள்ளார்.

Published on: October 3, 2026 at 1:24 pm

டோக்கியோ, அக்.3, 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் பாவ் ஸியியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, தனது முதல் ஆசிய விளையாட்டுத் தங்கத்தை கைப்பற்றினார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்ததாக லோவ்லினா தெரிவித்துள்ளார். கடினமான காலகட்டமாக இருந்தபோதிலும் தொடர்ந்து விளையாடியதாகவும், ஆசிய விளையாட்டில் ஏற்கனவே வென்ற வெள்ளிப் பதக்கத்தின் நிறத்தை மாற்ற வேண்டும் என்பதே முக்கிய இலக்காக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை லோவ்லினா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு எம்.சி.மேரி கோம் மட்டுமே இந்தியாவுக்காக இந்த சாதனையை படைத்திருந்தார். மேலும், மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் 12 ஆண்டுகால தங்கப் பதக்க காத்திருப்பையும் லோவ்லினா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டு மல்யுத்தம்.. தங்கம் வென்ற சுஜித்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com